ஒரு முறை உங்கள் தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். ஸ்கிரிப்ட் எழுதுவது, குரல் பதிவு செய்வது, வீடியோவை எடிட் செய்வது, YouTube மற்றும் Instagram-இல் நீங்கள் சொன்ன நேரத்தில் வெளியிடுவது — இதையெல்லாம் Videocadence பார்த்துக்கொள்ளும். நீங்கள் வேறு வேலையைப் பாருங்கள்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 75 மொழிகளில் வீடியோ உருவாக்கலாம்.
நான்கு படிகள். முதல் படியில் மட்டுமே உங்கள் நேரம் தேவை.
தொடர்ந்து வருவதால்தான் சேனல் வளரும். ஒரு நல்ல வீடியோ செய்வது கஷ்டம் இல்லை; தொண்ணூறாவது வீடியோதான் கஷ்டம்.
வீடியோக்கள், சேனல், பார்வையாளர்கள் — எல்லாம் உங்களுடையது. எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கலாம், விலகலாம்.
ஆரம்பத்தில் ஒப்புதல் முறை இயங்கும். Autopilot என்பது நீங்கள் எடுக்கும் முடிவு, தானாக நடப்பது அல்ல.
விலைகள் ரூபாயில். GST கூடுதலாகச் சேர்க்கப்படும். ஒரு தளம் அல்லது இரண்டும் — Instagram Reels மட்டும், YouTube Shorts மட்டும், அல்லது அதே வீடியோ இரண்டிலும்.
பணம் செலுத்திய 7 நாட்களுக்குள் நிறுத்தினால் 50% திரும்பக் கிடைக்கும், அதன் பிறகு 30%. முழு விதிமுறைகள்.
இந்தியாவுக்கு வெளியே இருக்கிறீர்களா? அனைத்து நாட்டு கார்டுகளும் செல்லும் — கட்டணம் ரூபாயில்; உங்கள் வங்கி மாற்றும்.
இரண்டுமே அவற்றின் அதிகாரப்பூர்வ API வழியாக முன்கூட்டியே பதிவிடுவதை அனுமதிக்கின்றன — சமூக ஊடக நிர்வாகிகள் பயன்படுத்தும் அதே முறைதான். சிக்கல் வருவது மலிவான, அள்ளித் தெளிக்கப்பட்ட உள்ளடக்கத்தால்தான். அதனால் இங்கே கவனம் எண்ணிக்கையில் அல்ல, பார்க்கத் தகுந்த ஸ்கிரிப்டில்.
முடியும். ஒவ்வொரு சேனலுக்கும் தனி மொழி உண்டு. ஸ்கிரிப்டும் குரலும் அதே மொழியில் உருவாகும். தமிழுக்கு 8 குரல்கள், ஹிந்திக்கு 2, மேலும் 73 மொழிகள். ஒரே கணக்கில் ஒரு சேனலைத் தமிழிலும் இன்னொன்றை ஆங்கிலத்திலும் நடத்தலாம்.
ஆம், அது வேண்டுமென்றே. உங்கள் சொந்த Google Cloud project-ஐ இணைப்பதால், upload quota உங்களுக்கு மட்டுமே. மற்ற வாடிக்கையாளர்களுடன் பகிரப்படாது. வழிகாட்டுவோம் — ஒரே ஒரு முறை செய்தால் போதும்.
ஸ்கிரிப்டை மாற்றலாம், மீண்டும் உருவாக்கலாம், பதிவிறக்கலாம், அழிக்கலாம். Autopilot இயக்காத வரை உங்கள் ஒப்புதல் இல்லாமல் எதுவும் வெளியாகாது.
ஏற்கனவே வெளியானவை உங்கள் சேனலிலேயே இருக்கும் — அது உங்கள் சேனல். கணக்கு இலவசத் திட்டத்திற்கு மாறும். வீடியோ கோப்புகளைச் சிறிது காலம் வைத்திருப்போம்.
இல்லை. மாதம் வாரியாகத்தான். உங்கள் கணக்கிலிருந்தோ, வங்கி அல்லது UPI செயலியிலிருந்தோ நிறுத்தலாம். இலவசத் திட்டத்திற்குக் கார்டே தேவையில்லை.
மூன்று வீடியோக்கள், கார்டு தேவையில்லை, அமைக்க ஐந்து நிமிடம். பிடிக்கவில்லை என்றால் ஒரு மாதம் அல்ல, ஒரு மாலைப் பொழுதுதான் போகும்.
இலவசமாகத் தொடங்குங்கள்